EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

ஐப்பசி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஐந்து நாட்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (09.10.2026) நடைபெற்றன.

இப்போட்டியில் பங்குபற்றிய மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் ஒருவர் வெள்ளிப் பதக்கத்தையும், இருவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும், துணுக்காய் கல்வி வலயத்துக்கும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கங்களை வென்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு எஸ். டானுஜா (S. Danuja) 57–60 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம், எம். அபிஷா (M. Abisha) 60–65 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம், யு.கலைவாணி (U. Kalaivaani) – 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 48–50 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்.

இம்மாணவர்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சிகளை, முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரரும் பல தேசிய வீரர்களை உருவாக்கியவருமான கா. நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்டர்) மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனையும் குத்துச்சண்டைப் பயிற்றுநருமான இந்துகா தேவி ஆகியோர் வழங்கியிருந்தனர்.

தேசிய மட்டப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றதன் மூலம், வடமாகாணப் பாடசாலைகளில் அதிக பதக்கங்களைப் பெற்ற பாடசாலையாக மல்லாவி மத்திய கல்லூரி சாதனை படைத்துள்ளது.

குத்துச்சண்டைப் போட்டியில் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமையும் விடாமுயற்சியும் பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ளதுடன், மல்லாவி பிரதேசத்துக்கும் துணுக்காய் கல்வி வலயத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – பல மாகாணங்களுக்கு முன்னறிவிப்பு!
அண்மைய செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – பல மாகாணங்களுக்கு முன்னறிவிப்பு!

ஐப்பசி 10, 2026
சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

ஐப்பசி 10, 2026
கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
அண்மைய செய்திகள்

கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஐப்பசி 10, 2026
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
அண்மைய செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

ஐப்பசி 10, 2026
ரியாத் விமான சேவைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தம்!
அண்மைய செய்திகள்

ரியாத் விமான சேவைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தம்!

ஐப்பசி 10, 2026
ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஐப்பசி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

3 நாட்கள் முன்னர்
யாழில் மரக்குற்றிகளுடன்  ஒருவர் கைது

யாழில் மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை

மன்னாரில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை

5 நாட்கள் முன்னர்
இலங்கை – இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம்

இலங்கை – இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம்

3 நாட்கள் முன்னர்
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check