EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் அபிவிருத்தி திட்டங்களுக்கு 651.96 மில்லியன் நிதி!

யாழில் அபிவிருத்தி திட்டங்களுக்கு 651.96 மில்லியன் நிதி!

ஐப்பசி 15, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (14.10.2026) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கோரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான ‘சமூக சக்தி’ தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் ஆராயப்பட்டன.

அத்துடன், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 18 வீதிகளைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 4,372 மீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்காக 191.40 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீதி வலையமைப்பில் உள்ளடங்காத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற இடங்களைச் சீரமைப்பதற்கான முன்மொழிவுகளும் இதன்போது ஆராயப்பட்டன.

வீதிப் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், வடிகால்களைப் பாதுகாப்பாக மூடுதல், பாடசாலைகளுக்கு அருகில் பாதசாரிக் கடவைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை அமைத்தல் உள்ளிட்ட 28 பணிகளுக்காக 62.95 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், மாவட்டச் செயலகம், மத்திய அரசுத் திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றால் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது வீடமைப்பு, விவசாயம், கிராமிய வீதி அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!
இலங்கை

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!

ஐப்பசி 15, 2026
தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!
இலங்கை

தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!

ஐப்பசி 15, 2026
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!
இலங்கை

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!

ஐப்பசி 15, 2026
கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
இலங்கை

கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

ஐப்பசி 15, 2026
இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

ஐப்பசி 15, 2026
மன்னார் பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
இலங்கை

மன்னார் பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

ஐப்பசி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

2 நாட்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

4 நாட்கள் முன்னர்
இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

9 மணத்தியாலங்கள் முன்னர்
வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

3 நாட்கள் முன்னர்
ரியாத் விமான சேவைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தம்!

ரியாத் விமான சேவைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தம்!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check