EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

ஐப்பசி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்காக, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ தெரிவித்துள்ளது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள ரெலோவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த கட்சியின் பேச்சாளர் சுரேன் குருசாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியும் அவரது கட்சியும் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, உள்ளூரில் இயங்கும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள ஏனைய சக்திகளை ஒன்றிணைத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து, சர்வதேச நாடுகளின் ஆதரவையும் அழுத்தத்தையும் பெற்று அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அதிகரித்த வரிச்சுமை காரணமாக அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தேர்தல் அரசியலுக்கு அப்பால், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களில் அனைத்துத் தமிழ் தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ரெலோ வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதைப் போன்று, எதிர்காலத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது
அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

ஐப்பசி 17, 2026
நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

ஐப்பசி 17, 2026
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்
அண்மைய செய்திகள்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

ஐப்பசி 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!

ஐப்பசி 17, 2026
கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

ஐப்பசி 17, 2026
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
அண்மைய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

6 மணத்தியாலங்கள் முன்னர்
திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில்  பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

5 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

4 நாட்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check