புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் முடிவுகளை இன்று (17) வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பரீட்சார்த்திகள் தங்கள் பெறுபேறுகளை பார்வையிட இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk என்ற இணைத்தளத்தினுள் சென்று பரீட்சைக்குரிய எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேற்றை பார்வையிடலாம்.
குறித்த பரீட்சை முடிவு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் 011 278 4208, 011 278 4537 அல்லது 011 278 5922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.











