மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ. கிருபாகரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
குறித்த சேவையினை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்தப் புதிய சேவையின் மூலம், மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காகப் பொதுமக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அரச சேவைகளைப் பொதுமக்களுக்கு இலகுவாகவும் அண்மையிலும் கிடைக்கச் செய்யும் நடவடிக்கையாகவும் இது அமைகின்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில் மாவட்டச் செயலகப் பிரதமர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், பிரதம வாகனப் பரிசோதகர், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











