அல்பர்ட்டாவில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், குடியேற்றத்தின் மீதான மாகாணத்தின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கும், தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கான சில சமூக சேவைகளில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குடியேற்றம் தொடர்பான நான்கு கேள்விகளுக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவாக வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளில் அல்பர்ட்டா மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு 54 சதவீதத்தினரும், மாகாணத்தின் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளுக்கான தகுதியைக் கட்டுப்படுத்துவதற்கு 54 சதவீதத்தினரும் ஆதரவளித்துள்ளனர்.
மேலும், தற்காலிகக் குடியிருப்பாளர்கள் சமூக உதவிகளைப் பெறுவதற்கு குறைந்தது 12 மாதங்கள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு 58 சதவீதத்தினரும், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளுக்குக் கட்டணம் அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பதற்கு 57 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நடைமுறையில் எந்தளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வாக்கெடுப்பில் கிடைத்த ஆதரவு மட்டும் உடனடியாகச் சட்ட மாற்றங்களை ஏற்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.











