EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாம்பன் கடற்பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஏழு அரிய வகை கூரல் மீன்கள், இந்திய மதிப்பில் 3 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில், மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இருந்து நேற்று 20ஆம் திகதி, 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தென் கடற்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், மீன்பிடித்துவிட்டுத் இன்று 21ஆம் திகதி மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

இதன்போது, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டிட்டோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஐந்து கூரல் மீன்களும், மற்றொரு விசைப்படகில் இரண்டு கூரல் மீன்களும் சிக்கியுள்ளன.

மொத்தமாக ஏழு மீன்களும் 105 கிலோகிராம் எடை கொண்டிருந்த நிலையில், ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 500 ரூபாய் வீதம், மொத்தம் 3 இலட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கூரல் மீன்கள் பொதுவாக உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, அவற்றின் வயிற்றுப் பகுதியில் காணப்படும் காற்றுப்பை போன்ற அமைப்பான Fish Maw அதிக வணிக மதிப்பைக் கொண்டுள்ளது.

இந்தப் பொருள் சில உணவுப் பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், கிழக்காசிய நாடுகளில் விலையுயர்ந்த சூப் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஒரே நாளில் பிடிக்கப்பட்ட ஏழு கூரல் மீன்களும் பல இலட்சம் ரூபாய்க்கு விற்பனையானமை, பாம்பன் விசைப்படகு மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு
இலங்கை

ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஐப்பசி 21, 2026
புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்
அண்மைய செய்திகள்

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

ஐப்பசி 21, 2026
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு
அண்மைய செய்திகள்

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

ஐப்பசி 21, 2026
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

4 நாட்கள் முன்னர்
ஐந்து நாய்களை வளர்த்த  உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஐந்து நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

3 நாட்கள் முன்னர்
யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

2 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check