EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஹெப்ரன் நகரில் இஸ்ரேல் இராணுவம்: பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்!

ஹெப்ரன் நகரில் இஸ்ரேல் இராணுவம்: பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்!

ஐப்பசி 27, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரன் (Hebron) நகரில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுவரும் கடுமையான ஒடுக்குமுறை மற்றும் வலுக்கட்டாயமான வெளியேற்ற நடவடிக்கைகள் மூலம் பாலஸ்தீனர்களை நிரந்தரமாக வெளியேற்றும் புதிய நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஹெப்ரன் நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாகத் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹெப்ரன் மாகாணத்தில் மொத்தம் 488 குடும்பங்களைச் சேர்ந்த 3,171 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாகாண ஆளுநர் கலீத் துதின் (Khaled Dudin) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹெப்ரன் நகரின் எல்லைக்குள் மாத்திரம் 3,043 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக மேயர் யூசப் அல்-ஜபாரி (Yousef al-Jabari) குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதுடன், குறைந்தது 71 பேரைக் கைது செய்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நகரில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 1967ஆம் ஆண்டுப் போருக்குப் பிறகு இல்லாத அளவிலான கடுமையான இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்ஹாகு உறுதியளித்திருந்தார்.

தற்போது பாலஸ்தீனர்களின் வீடுகளை இராணுவ முகாம்களாகவும் கள விசாரணை மையங்களாகவும் இஸ்ரேல் படையினர் மாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளை புல்டோசர்கள் மூலம் அழிக்கும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தீவிர வலதுசாரி வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவே இத்தகைய கடுமையான இராணுவ நடவடிக்கைகளை நெட்டன்ஹாகு அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக மேயர் யூசப் அல்-ஜபாரி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்: அண்ணாமலை
உலகம்

உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்: அண்ணாமலை

ஐப்பசி 27, 2026
காசாவில் தொடரும் இனப்படுகொலை: ஐ.நா. அறிக்கை!
உலகம்

காசாவில் தொடரும் இனப்படுகொலை: ஐ.நா. அறிக்கை!

ஐப்பசி 27, 2026
பிரேசில் அதிபர் தேர்தல் முறைகேடாக நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
உலகம்

பிரேசில் அதிபர் தேர்தல் முறைகேடாக நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஐப்பசி 27, 2026
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
உலகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஐப்பசி 25, 2026
பீகாரில் தீவிர நவராத்திரி விரதமிருந்த பெண் உயிரிழப்பு!
உலகம்

பீகாரில் தீவிர நவராத்திரி விரதமிருந்த பெண் உயிரிழப்பு!

ஐப்பசி 25, 2026
மிச்சிகனில் அதிபர் டிரம்ப் பிரசாரம்: தீவிரமடையும் செனட் சபை போட்டி!
உலகம்

மிச்சிகனில் அதிபர் டிரம்ப் பிரசாரம்: தீவிரமடையும் செனட் சபை போட்டி!

ஐப்பசி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

4 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணக் குடாக்கடலில் விசேட படகுச் சுற்றுலா!

யாழ்ப்பாணக் குடாக்கடலில் விசேட படகுச் சுற்றுலா!

18 மணத்தியாலங்கள் முன்னர்
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

4 நாட்கள் முன்னர்
கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

7 நாட்கள் முன்னர்
ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check