வேலைநிறுத்தக் காலங்களில் நிறுவனங்கள் மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட விதிகள், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் தொலைதூரப் பணியில் (teleworking) ஈடுபடுபவர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது.
தொிலாளர் சட்டத்தின் கீழ் உள்ள வேலைநிறுத்தத் தடை விதிகள், தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தின் போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ‘நிறுவன வளாகத்திற்குள்’ (establishment) வேலைகளைச் செய்ய மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்கின்றன.
முன்னதாக, ஜோலியெட் (Joliette) பகுதியில் உள்ள தனது நிறுவனத்தின் தொழிற்சங்கப் பணியாளர்களின் பணிகளை மேற்கொள்வதற்காக, தொலைதூரப் பணியில் ஈடுபட்ட தொழிற்சங்க உறுப்புரிமை அற்ற ஊழியர் ஒருவரின் சேவையைப் பயன்படுத்தியமை ஆனது, நிறுவனத்தின் வேலைநிறுத்தத் தடை விதிகளை மீறுவதாக யுனிபார் (Unifor) தொழிற்சங்கம் வாதிட்டது. இதனைத் தொடர்ந்தே, நிர்வாகத் தொழிலாளர் தீர்ப்பாயம் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
எனினும், நிர்வாகத் தொழிலாளர் தீர்ப்பாயம் வழங்கிய இத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் ‘நியாயமற்றது’ எனக் கூறி நிராகரித்திருந்தது.
தற்போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்துள்ளதுடன், நிர்வாகத் தொழிலாளர் தீர்ப்பாயத்தின் ஆரம்பத் தீர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











