EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் கண்டெடுக்கப்பட்ட மர்மக் கொள்கலனில் கிருமி இல்லை: காவல்துறை உறுதி!

கியூபெக்கில் கண்டெடுக்கப்பட்ட மர்மக் கொள்கலனில் கிருமி இல்லை: காவல்துறை உறுதி!

கார்த்திகை 7, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் நதிப் பகுதியில் அமைந்துள்ள ஆளில்லா தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதும் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான மர்மக் கொள்கலனில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தீவிர ஆந்தராக்ஸ் (Anthrax) கிருமி எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணக் காவல்துறை (Sûreté du Québec) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் திகதியன்று கியூபெக் நகருக்கு வடகிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல் ஓ கான் கார்ட் (Île aux Canards) தீவில் இந்த உலோகக் கொள்கலன் கண்டெடுக்கப்பட்டது.

அதனை மீட்கும் பணியில் கியூபெக் மாகாணக் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

எவ்வித ஆபத்துகளும் நேராமல் இருக்க வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், அபாயகரமான பொருட்கள் கையாளும் பிரிவு (hazmat team) மற்றும் உலங்குவானூர்தி ஆகியவை வரவழைக்கப்பட்டு, இந்தக் கொள்கலன் மீது தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கொள்கலனில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சபீல்ட் (Suffield) இராணுவத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சாம்பல்-பச்சை நிறத்திலான அந்த உலோகக் கொள்கலனின் மீது “Property Air Force U.S. Army” எனப் பொறிக்கப்பட்டுள்ளதுடன், அது 1942ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பதற்கான அடையாளமும் காணப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்கொள்கலனில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத திரவப் பொருள் மட்டுமே உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அந்தத் திரவம் என்னவென்பது குறித்தோ அல்லது அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்தோ காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் தொடரும் வேலைநிறுத்தம்: துணைமருத்துவ மாணவர்களின் பயிற்சிகள் தாமதம்!
கியூபெக்

கியூபெக்கில் தொடரும் வேலைநிறுத்தம்: துணைமருத்துவ மாணவர்களின் பயிற்சிகள் தாமதம்!

கார்த்திகை 7, 2026
வேலைநிறுத்த காலத்தில் தொலைதூரப் பணியாளர்களைப் பயன்படுத்துவது தடை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
கியூபெக்

வேலைநிறுத்த காலத்தில் தொலைதூரப் பணியாளர்களைப் பயன்படுத்துவது தடை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

கார்த்திகை 7, 2026
கியூபெக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பீப்பாய்!
கியூபெக்

கியூபெக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பீப்பாய்!

கார்த்திகை 7, 2026
கனடிய மத்திய அரசின் புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு கியூபெக் அரசு விமர்சனம்!
கியூபெக்

கனடிய மத்திய அரசின் புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு கியூபெக் அரசு விமர்சனம்!

கார்த்திகை 7, 2026
மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!
கியூபெக்

மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!

கார்த்திகை 5, 2026
ஷெர்புரூக் தரவுமையத் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மேயர் அறிவிப்பு!
கியூபெக்

ஷெர்புரூக் தரவுமையத் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மேயர் அறிவிப்பு!

கார்த்திகை 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதில் சிறந்த ஒருவர் லால் விஜேநாயக்க

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதில் சிறந்த ஒருவர் லால் விஜேநாயக்க

2 நாட்கள் முன்னர்
நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

3 நாட்கள் முன்னர்
யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

3 நாட்கள் முன்னர்
சுகவீன விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்

சுகவீன விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்

3 நாட்கள் முன்னர்
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check