EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!

மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!

கார்த்திகை 5, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் ஒட்டுமொத்த சூதாட்டம் குறைந்துள்ள போதிலும், இணையவழி சூதாட்டம் (Online Gambling) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மொன்றியல் பொதுச் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

மொன்றியல் பொதுச் சுகாதாரப் பிரிவு மற்றும் கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தின் சூதாட்டம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் தலைமை அதிகாரி சில்வியா கைரூஸ் (Sylvia Kairouz) இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் 8,500 மொன்றியல் பகுதி பெரியவர்களிடம் நடத்தப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் இணையவழி சூதாட்டம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த இணையவழி சூதாட்டம், 2025 ஆம் ஆண்டில் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவ பெரிய உயர்வு ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது என கைரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறைந்தது ஒருவகை சூதாட்டத்திலாவது ஈடுபடும் பெரியவர்களின் எண்ணிக்கை 2018 இல் 54 சதவீதமாக இருந்த நிலையில், 2025 இல் 39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் ஆண்கள் இணையவழி சூதாட்டங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இணையம் மற்றும் நேரில் விளையாடப்படும் ஸ்லாட் மெஷின்கள், விளையாட்டுப் பந்தயங்கள் (Sports betting) மற்றும் போக்கர் (Poker) போன்ற அதிக ஆபத்துள்ள விளையாட்டுகள் ஆண்களை அதிகம் ஈர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகும் பிரச்சனை 4.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது, இதுவரை 3 சதவீதத்தைத் தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி மற்றும் நேரத்தைச் சுயமாகக் கட்டுப்படுத்த முடியாமல் போவதே இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் இளைஞர் சூதாட்டப் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேச மையத்தின் பணிப்பாளர் ஜெஃப் டெரெவென்ஸ்கி (Jeff Derevensky), விளம்பரங்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவு ஆகியவை நிலைமையை மோசமாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஷெர்புரூக் தரவுமையத் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மேயர் அறிவிப்பு!
கியூபெக்

ஷெர்புரூக் தரவுமையத் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மேயர் அறிவிப்பு!

கார்த்திகை 5, 2026
மக்கில் பல்கலைக்கழகத்தில் தடகளப் பிரிவை மீண்டும் செயற்படுத்த பரிந்துரை!
கியூபெக்

மக்கில் பல்கலைக்கழகத்தில் தடகளப் பிரிவை மீண்டும் செயற்படுத்த பரிந்துரை!

கார்த்திகை 5, 2026
கியூபெக்கின் புதிய சட்டமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு!
கியூபெக்

கியூபெக்கின் புதிய சட்டமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு!

கார்த்திகை 5, 2026
கர்ப்பிணிப்பெண் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன்!
கியூபெக்

கர்ப்பிணிப்பெண் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன்!

கார்த்திகை 5, 2026
மொன்றிய வீதிகளில் புதிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த காவல் பிரிவு நடவடிக்கை!
கியூபெக்

மொன்றிய வீதிகளில் புதிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த காவல் பிரிவு நடவடிக்கை!

கார்த்திகை 5, 2026
மொன்றியலில் யூத உணவு உற்பத்தி நிலையத்தில் தீ!
கியூபெக்

மொன்றியலில் யூத உணவு உற்பத்தி நிலையத்தில் தீ!

கார்த்திகை 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து  சாரதி கைது!

யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து சாரதி கைது!

5 நாட்கள் முன்னர்
ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான  மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

5 நாட்கள் முன்னர்
டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

6 நாட்கள் முன்னர்
இளம் உயிர்களைப் பறிக்கும் வீதி விபத்துகள் – வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஆதங்கம்

இளம் உயிர்களைப் பறிக்கும் வீதி விபத்துகள் – வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஆதங்கம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check