மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை சிறுப்பிட்டி மேற்கு ஜனசக்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர், மாவீரர்களின் படங்களைத் தாங்கியவாறு மங்கள வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பொதுச்சுடரை மாவீரர் அகசேரனின் தாயார் கனகலிங்கம் கிருஷ்ணமலர் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் பொதுத் திருவுருவப் படத்திற்கான மலர் மாலையை மாவீரர் எழிலரசனின் தாயாரான நாகமணி கமலா அணிவித்தார்.
பின்னர் மாவீரர்களின் திருவுருவப் படங்களின் முன் சுடரேற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினரால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











