EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வலி வடக்கு வீதிகளை திறவுங்கள்- அங்கஜன் பத்மநாதன்

வலி வடக்கு வீதிகளை திறவுங்கள்- அங்கஜன் பத்மநாதன்

புரட்டாதி 27, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான பல வீதிகள் யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 குறிப்பாக,
1. யாழ்ப்பாணம் – பலாலி வீதி (கிழக்கு பக்கம்): வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அடுத்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள வீதி இராணுவ கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த வீதி பருத்தித்துறை பொன்னாலை வீதியுடன் இணைவதுடன் உள்ளூர் போக்குவரத்திற்கு இன்றியமையாததாகும்.
 2. அச்சுவேலி வயாவிளான் – தோளக்கட்டி வீதி: இந்த முக்கிய வீதி மூடப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள முக்கியமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது.
 3. வயாவிளான் யாழ் விமான நிலைய ஓடுபாதை பக்க வீதி: கட்டுவன் சந்தி ஊடாக இந்த வீதியை திறப்பதன் மூலம் யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான தொடர்பை கணிசமாக மேம்படுத்த முடியும்.
 4. காங்கேசன்துறை – கீரிமலை வீதி (ஜனாதிபதி அரண்மனை வீதி): வரலாற்று மற்றும் கலாசார தளத்திற்கு இட்டுச் செல்லும் இந்த வீதி மீண்டும் திறக்கப்படுவதால், உள்ளூர் சமூகங்கள் பயனடைவதுடன், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். ஆகவே யாழ்ப்பாண மக்கள் அமைதி மற்றும் இயல்பு நிலைக்கான உறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ள சூழலில், இந்த வீதிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதால் நல்லிணக்கம் மற்றும் பிரதேச வளர்ச்சி ஆகியன வலுவடைவதுடன், எமது மக்களின் நீண்டகால கவலையை நிவர்த்தி செய்து, அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சிக்கான உங்கள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கும்.
 ஆகவே இவ்வீதிகள் மீளத் திறப்பதால் யாழ்ப்பாண மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதோடு எமது தேசத்தின் அமைதியான வளமான எதிர்காலத்துக்கும் உறுதுணையாக அமையும் என்பதால், இந்த வேண்டுகோளுக்கு உங்களது கவனம் செலுத்தப்படும் என நான் நம்புகிறேன். என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஆவணி 24, 2026
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

ஆவணி 24, 2026
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது
அண்மைய செய்திகள்

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

ஆவணி 24, 2026
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

ஆவணி 24, 2026
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

ஆவணி 24, 2026
யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்
அண்மைய செய்திகள்

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

2 நாட்கள் முன்னர்
இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

6 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

6 நாட்கள் முன்னர்
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

7 நாட்கள் முன்னர்
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In