மின்கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இலங்கைமின்சார சபை ஆராயவுள்ளதாக மின்சாரசபையின் தலைவர் திலக் சிலாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு நான்கு தடவை மின்கட்டணங்கள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளவேண்டும் எனினும் இது முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சவாலான தருணங்களில் மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மின்கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.











