15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை – இஹல முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபரை கண்டி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பிரதேசவாசிகளையும் அச்சுறுத்தி மாணவர்களை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதுடைய சிறுமி பேராதனைப் பொலிஸில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இது தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார் சந்தேக நபரை எச்சரித்து விடுவித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் 5 பாடசாலை மாணவிகளும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.










