EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு.

மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு.

கார்த்திகை 7, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரவை க்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்ட கால பிரச்சினையாக மேய்ச்சல் தரை காணப்படுகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்த போதும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அடாத்தாக விவசாயம் செய்து வருகின்றமை குறித்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமது பிரச்சினையை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை(6) மாலை நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகளுக்கும்,மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பின்னர் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் குறித்த பிரச்சினை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை (6) மாலை நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகள் ,மெசிடோ நிறுவன பிரதி நிதிகளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடினர்.

குறிப்பாக மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலர் அடாத்தாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறித்தும், முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை குறித்தும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த பிரச்சினை குறித்து இரு தரப்பினரையும் அழைத்து தீர்வை பெற்றுத் தருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கட்டுக்கரை புல்லறுத்தான் குளம் பகுதியில் 352 ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரவையாக வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில்
தற்போது வரை இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

புரட்டாதி 22, 2026
யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு
அண்மைய செய்திகள்

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

புரட்டாதி 22, 2026
கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

புரட்டாதி 22, 2026
முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி
அண்மைய செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

புரட்டாதி 22, 2026
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

புரட்டாதி 22, 2026
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

3 நாட்கள் முன்னர்
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

1 நாள் முன்னர்
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

6 நாட்கள் முன்னர்
பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In