EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

புரட்டாதி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்கு தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடுகை செய்யும் நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு, கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும்.

இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டது டன், மத்திய சுகாதார அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடம் 77.3 மீற்றர் நீளமும் 34.3 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையவுள்ளது. தரைத்தளம் மற்றும் மேல்தளம் என இரு மட்டங்களைக் கொண்ட இக்கட்டடத்தின் ஒவ்வொரு தளத்தினதும் பரப்பளவு 2,651.4 சதுர மீற்றர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மொத்தம் 248 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் இந்தப் புதிய முதலீடு, விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் திறனை மேம்படுத்துவதுடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

அடிக்கல் நடும் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்ட பின்னர் அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. அடிக்கல்லை மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நடுகை செய்தனர். இதனைத் தொடர்ந்து நினைவுப் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. அத்துடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவ மனையின் அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்
அண்மைய செய்திகள்

பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

புரட்டாதி 16, 2026
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

புரட்டாதி 16, 2026
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது
அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

புரட்டாதி 16, 2026
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு

புரட்டாதி 16, 2026
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புரட்டாதி 16, 2026
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது
அண்மைய செய்திகள்

முழங்காவில் கடற்கரையில் 370 கிலோ மீன்களுடன் இருவர் கைது

புரட்டாதி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

16 மணத்தியாலங்கள் முன்னர்
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

3 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In