இந்த அவசர உலகில், உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இடுப்பு, தொப்பை ஆகிய பகுதிகளில் மிக வேகமாக கொழுப்பு சேர்ந்து விடுகிறது. ஆனால், இதை அகற்றுவது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. தொப்பை கொழுப்பு, இடுப்பு கொழுப்பு ஆகியவற்றை கரைத்து, உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
உடல் பருமனை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஜிம் செல்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், இவற்றுக்கு மத்தியில் சில அடிப்படை விஷயங்களை மறந்து விடுகிறார்கள். சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து, விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இவை தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. தொப்பையை குறைக்க உதவும் ஆரோக்கியமான பச்சை காய்கறி சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை தண்ணீர் (Lemon)
எலுமிச்சையில் உள்ள விற்றமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகின்றன. எலுமிச்சம்பழ நீரை தேன் கலந்து குடிப்பதால் சுவை இன்னும் நன்றாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
இஞ்சி தண்ணீர் (Ginger)
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொப்பையை குறைக்க உதவும். இஞ்சி நீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றது.
புதினா தண்ணீர் (Mint)
புதினா நீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்றில் தோன்றும் வாயுவை குறைக்கிறது. இதன் காரணமாக புதினா தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகின்றது. புதினாவில் உள்ள மெந்தோல் உங்கள் உடலை குளிர்ச்சியாக்கி, புத்துணர்ச்சியூட்டுகிறது.
இலவங்கப்பட்டை தண்ணீர் (Cinnamon)
இலவங்கப்பட்டையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கலோரிகளை இது வேகமாக எரிக்க உதவுவதால், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை வேகமாக எரிக்கிறது.
மஞ்சள் தண்ணீர் (Turmeric)
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை இடுப்பு கொழுப்பு மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. மேலும் மஞ்சள் நீர் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. இதனால் உடல் பருமன் வேகமாக குறையத் தொடங்குகிறது.











