ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹோலிரோசரி மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு.பரசுராமன் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹோலிரோசரி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான திரு. பரசுராமன் சங்கர் பாடசாலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
ஹோலிரோசரி மகா வித்தியாலயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முழுமையான பங்களிப்பை வழங்கி பாடசாலையை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லவுள்ளதாக புதிய அதிபர் திரு.பரசுராமன் சங்கர் தெரிவித்துள்ளார்.