EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியாபொது வேட்பாளர் விடயம் இன்றும்  முடியவில்லை!

வவுனியாபொது வேட்பாளர் விடயம் இன்றும் முடியவில்லை!

ஆனி 16, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் நிறுத்தும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் இன்றும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன்பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம்.

அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைகாரியாலத்திற்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இது ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை. நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம்.

முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுவரை அதிகாரபகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர்.

அது முழுமையான தீர்வுஅல்ல அதனை நாம் ஏற்கவில்லை ஆனால் அரசியலமைப்பில் உள்ளதையாவது அமுல்படுத்த வேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்த பேச்சுவார்த்தைகள் ஆராக்கியமாக இருந்தது. அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது.

மும்முனைப்போட்டி ஒன்று ஏற்ப்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம்பேசுதலை நடத்தவேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்த வேண்டும் என்ற கருத்தோடு நாங்கள் இருக்கின்றோம்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழு கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப்பற்றி பேசவில்லை. மக்களது கருத்துக்களையும் அறிந்து தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கான சுயாதீனம் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவாஜிலிங்கம் வழமையாகவே நிற்ப்பவர். பழக்கதோசத்தில் அவர் நிற்கலாம் அதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு
இலங்கை

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு

மார்கழி 7, 2025
மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு
அண்மைய செய்திகள்

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

மார்கழி 7, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
இலங்கை

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மார்கழி 7, 2025
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் –    அம்பலவாணர் சிவபாலசுந்தரம்
இலங்கை

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் – அம்பலவாணர் சிவபாலசுந்தரம்

மார்கழி 7, 2025
அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!
அண்மைய செய்திகள்

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

மார்கழி 7, 2025
யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
இலங்கை

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இரு மாணவர்களின் சடலம் மீட்பு!

கண்டி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 31 பேர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

2 நாட்கள் முன்னர்
எலிக்காய்ச்சல் தொடர்பாக வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் விடுத்துள்ள அறிவிப்பு!

எலிக்காய்ச்சல் தொடர்பாக வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் விடுத்துள்ள அறிவிப்பு!

4 நாட்கள் முன்னர்
இடர் முகாமைத்துவக் குழுக்களை தொடர்பு கொள்ளுங்கள் –  ஆளுநர் நா.வேதநாயகன்

இடர் முகாமைத்துவக் குழுக்களை தொடர்பு கொள்ளுங்கள் – ஆளுநர் நா.வேதநாயகன்

5 நாட்கள் முன்னர்
மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In