சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றைய தினம் நடைபயணம் இடம்பெற்றிருந்தது.
மீசாலை சந்தியில் ஆரம்பித்த மேற்படி நடை பயணம் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடாக பாடசாலையை சென்றடைந்தது.
நடைபயணத்தில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலையின் சாரணர் அணியினர், பாண்ட் அணியினர், விளையாட்டு அணியினர், சுற்றாடல் முன்னோடிக் கழகத்தினர், புத்தாக்க கழகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.