அண்மைய காலமாக நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறக் கூடாது என சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது குறித்த மனுவில் 19 ம் அரசியலமைப்பு திருத்த சட்டமானது பொதுசன வாக்கெடுப்பு மூலம் முறையாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதம நீதியரசர் மற்றும் மூன்று பேர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயம் முன்னிலையில் சட்டத்தரணியால் தாக்கல் செய்த மனுவானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆயினும் உயர் நீதிமன்றம் மனுவை நிராகரித்ததுடன் மனுவை தாக்கல் செய்தமைக்கான வழக்கு செலவு கட்டணமாக 5 இலட்சம் ரூபாயை இம்மாத இறுதிக்குள் செழித்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.