அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 6 கிராம் 300 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உட்பட இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு 8 மணிக்கு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று இரவு இறக்காமம் பிரதேசத்தில் குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரை 6 கிராம் 300 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் கைது செய்தனர்.
அதேவேளை 43 வயதுடைய பெண் ஒருவரை ஜஸ்போதை பொருளுடன் கைது செய்தனர். இந்த இரு வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.











