ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்றைய தினம் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இந்து குஷ் பகுதியில் மதிய வேளையில் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 4 .3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையமானது அறிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் 125 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித செய்தியும் வெளியாகவில்லை.