EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
எம்முடைய ஆதரவு ரணிலுக்கு -புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி!

எம்முடைய ஆதரவு ரணிலுக்கு -புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி!

ஆவணி 25, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ரணில் நரியாக இருக்கட்டும்: அவரையே போராளிகளும் மக்களும் ஆதரிக்க வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பேசியே எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும். முன்னாள் போராளிகள் தொடர்பான 5 கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று (24.08) வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இருந்தோம். யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை.

எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும், வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க சொன்னார்கள். நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அவர்களுடன் பேசியிருந்தோம். இதன்போது எமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நிச்சயமாக எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பிரகாரம் எமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவை பிரதமராக இருந்தவர். ஜனாதிபதியாக உள்ளார். சிறந்த ராஜதந்திரி. எமது போராட்ட வரலாறு தெரியும். தற்போது சாரைப் பாம்பு போன்று நாம் உள்ள நிலையில் நாம் தான் பேச வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவது தான் பொருத்தமானது. அதனால் நாம் அவரை நம்புகிறோம்.

வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும். வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 3000 பேரின் பெயர் விபரங்களும் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு முதல் கட்டமாக வேலைத் திட்டங்களை வழங்குவதாக தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி அவரிடமே நாம் பேச்சுவாதர்த்தை செய்தோம் . அந்த வளர்ப்பில் வந்தவர்கள் தான் நாங்கள். அவர் நரியோ, எலியோ, புலியோ, சிங்கமோ பிரச்சனை இல்லை. நாங்கள் அவர் மீத நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் புலி. அவருக்கு தான் எமது வலி தெரியும். அவருடன் தான் நாம் பேச முடியும். எனவே, தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றியடைய வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

1 நாள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

2 நாட்கள் முன்னர்
மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

3 நாட்கள் முன்னர்
வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 நாட்கள் முன்னர்
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In