தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி நபர்ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டது.
குறித்த சம்பவம் இன்றையதினம் காலை இடம்பெற்றது..
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
இன்றையதினம் காலை வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவைர சேர்த்துவைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
நீண்டநேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் பொலிசார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளிற்கினங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கியிருந்தார்.











