EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!

தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!

புரட்டாதி 26, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூடடமைப்பு உதவியுடன் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.

இந்நிலையில் இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது.

இதையடுத்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வகையில் முயற்சி செய்து பொதுமன்னிப்பு பெயர் பட்டியல் அட்டவணையில் மீனவர் ராபர்ட் பெயரையும் சேர்க்கபட்டது. இதனால் ஓராண்டு தண்டனை பெற்ற மீனவர் ராபர்ட் அவர்களும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது இலங்கை அரசின் பொது மன்னிப்பில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு தண்டனை கைதி இவர் மட்டுமே. விடுதலையான மீனவர் ராபர்ட் அவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு மீன்வளத்துறை மூலம் இன்று குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

மீனவர் ராபர்ட் விடுதலைக்கு உதவிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசிற்கும் மீனவர்களின் குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுரா திசநாயக்க அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கை புதிய ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் திரு சேனாதிபதி சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் நிமிரோ மற்றும் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர் குரூஸ் மீனவ சங்க தலைவர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
கோண்டாவில் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமத்தை இரத்து செய்ய உத்தரவு

கோண்டாவில் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமத்தை இரத்து செய்ய உத்தரவு

7 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

1 நாள் முன்னர்
நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In