கனடாவில் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடவில்லை.