கனடா இந்திய இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாமீது கனடா பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேள்வி கேட்ட போது அதற்கு பதிலளித்த அவர், எல்லாம் மேசையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளமையும் குறிப்பிடதக்கது.