EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

ஆனி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல்செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டுமாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் தலைமையில் இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம், எனவே இதனை குழுநிலை விவாதமாக முன்னெடுக்குமாறு எதிர்தரப்பு உறுப்பினர்கள் கோரினர். இதனால் சபையில் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிற்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு குழப்பத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வர் மீது ஊழல்குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் பதவி விலக வேண்டும். அவர் தலைமையில் சபை கூட்டத்தை நடாத்தவிடமாட்டோம். பதில் முதல்வர் ஒருவரை தெரியுங்கள். அல்லது இந்தக்கூட்டத்தினை குழுநிலை விவாதமாக நடாத்துங்கள். அத்துடன் மாநகரசபையின் அடிப்படை கட்டளைச்சட்டங்கள் மீறப்பட்டுள்ளது. பல வேலைத்திட்டங்கள் கட்டளை சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு இடம்பெற்றுள்ளது. என எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

விசாரணை அறிக்கையானது சட்டரீதியாக வெளிவரும் வரை சபையை குழப்பவேண்டாம். வர்த்தமானியில் அது இன்னும் வெளியிடப்படவில்லை. முதல்வர் குற்றவாளி என்றால் அவரது பதவியினை ஆளுநர் இடை நிறுத்தியிருக்கலாமே. ஏன் அவ்வாறு இதுவரை நடக்கவில்லை.

மக்கள் சபையை குழப்பாதீர்கள். மக்கள் பணி பாதித்துள்ளது. இங்கு அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது. குற்றம் நடந்திருந்தால் முதல்வர் மீது நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் முதல்வரை மாற்றுங்கள் என ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதனால் நீண்டநேரமாக சபையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன், கூட்டத்தை நடாத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது.

இறுதியில் சபைஅமர்வு பத்து நிமிடங்கள் முதல்வரால் ஒத்திவைக்கப்பட்டு குழுநிலை விவாதமாக சபை அமர்வு தொடர்ச்சியாக இடம்பெற்றது.

இதேவேளை மாநகரமக்களே விழிப்படையுங்கள், கட்டளைச்சட்டங்களை மீறவேண்டாம்,சபையின் சொத்துக்களை விற்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சபை மண்டபத்திற்குள் ஏந்தியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆனி 22, 2026
செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

ஆனி 22, 2026
தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை
அண்மைய செய்திகள்

தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை

ஆனி 22, 2026
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

ஆனி 21, 2026
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

ஆனி 21, 2026
யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு
அண்மைய செய்திகள்

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

ஆனி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

2 நாட்கள் முன்னர்
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

6 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

1 நாள் முன்னர்
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In