ரொறன்ரோவில் புதிய தொலைபேசி குறியீடு (AreaCode) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொடர்பாடல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளதாகவும் கடந்த 2023 ஆம் ஆண்டு 942 எனும் புதிய எண் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள 416, 647 மற்றும் 437 ஆகிய இலக்கங்களுடன் 942 என்ற இலக்கமும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வரும் என கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொடர்பாடல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.