பிரபல சுற்றுலா தலமான அறுகம்பையில் தாக்குதல் பிரபல சுற்றுலா தளத்தை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் ரஸ்ய பிரஜைகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள ரஸ்ய பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் மக்கள் பெருமளவில் காணப்படும் இடங்களை தவிர்க்கவேண்டும் என ரஸ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறுகம்குடாவில் தாக்குதல் நடைபெறலாம் என்பது குறித்து நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.