மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் 51 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











