EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

யாழில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

ஐப்பசி 30, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோபாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடியவகையில் விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலைய அபிவிருத்தி, விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாதவாறு விமான நிலையம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி செய்தல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச சபைக்கு ஆளுனர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

3 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான  வழக்கு

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In