EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழ்ப்பாணம்ஈ.பி.டி.பி யிடம் மாத்திரமே தமிழ் தேசிய கொள்கை உண்டு – டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம்ஈ.பி.டி.பி யிடம் மாத்திரமே தமிழ் தேசிய கொள்கை உண்டு – டக்ளஸ் தேவானந்தா

கார்த்திகை 4, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் மட்டுமே கொள்கைகள் உள்ளன. ஏனைய தமிழ் கட்சிகளிடம் கொள்கை எதுவும் இல்லை வெறும் புலம்பல்கள் மட்டும் தான் உள்ளன. நல்ல தமிழ் தேசியத்தையும் முன்னெடுத்து செல்வது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் மாத்திரமே என அக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது நீண்ட கால முயற்சியின் பயனாகவே காணி விடுவிப்புக்கள் இடம்பெற்று அண்மையில் பலாலி – அச்சுவேலி வீதியும் திறக்கப்பட்டது. குறித்த வீதி கடந்த ஆட்சி காலத்தில் விடுவிக்கப்படவிருந்த நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு காரணமாக அப்போது சாத்தியமாகவில்லை. தற்போது அந்த வீதி திறந்து விடப்பட்டுள்ளது.

அண்மையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்தேன். அதன் போது வனஜீவராசிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் பேசி இருந்தேன். அதற்கு ஜனாதிபதி எங்களை விட உங்களுக்கு தான் வடக்கில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் பரீட்சயம் , நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அது தொடர்பில் பேசி முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதியை நான் சந்தித்த போது , 38 கோரிக்கைகளை முன் வைத்திருந்தேன். ஆனால் சிலர் சென்று மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட கோரியும் இன்னும் சிலர் அதனை வெளியிட வேண்டாம் என கோரியுமே ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மாத்திரமே கொள்கை இருக்கின்றது. 1990ஆம் ஆண்டில் இருந்து , மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என கூறி வருகிறோம். அது மட்டுமின்றி 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி வந்தோம். அதனை அப்போது அரசியல் கட்சிகளும் , போராட்ட இயக்கங்களும் மறுத்து வந்தனர். 13ஆம் திருத்தத்தை தும்பு தடியால் கூட தொட மாட்டோம் என்றனர்.

மாகாண சபை முறைமையை தும்பு தடியால் கூட தொட மாட்டோம் என கூறியவர்கள் தான் மாகாண சபை தேர்தல் அறிவித்த உடன் , தேர்தலில் போட்டியிட்டு, தமிழ் மக்களை உசுப்பேற்றி மாகாண சபையில் ஆட்சியை அமைத்தனர்.

பின்னர் மாகாண சபையில் எதுவும் செய்யாது, அவர் கள்ளர் இவர் கள்ளர் என தங்களுக்குள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

தமிழர்களின் பிரச்சனை சோறா ? சுதந்திரமா ? என வந்த போது சுதந்திரமே என போராடி , சோறும் இல்லை. சுதந்திரமும் இல்லாமல் போனது எங்களை பொறுத்த வரையில் சோறும் முக்கியம் , சுதந்திரமும் முக்கியம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அப்போதே நடைமுறைப்படுத்தி இருந்தால் , தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்க வேண்டி வந்திருக்காது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மக்கள் எங்கள் கொள்கைக்காக தான் வாக்களித்து வருகின்றனர். ஈ.பி.டி.பி மீது இருந்த பயத்தினால் தான் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கினார்கள்.

எங்களை பொறுத்தவரையில் மூன்று “அ ” க்கள் உள்ளன. ஒன்று அன்றாட பிரச்சனை , மற்றையது அபிவிருத்தி , மற்றையது அரசியல் தீர்வு இந்த மூன்று “அ ” க்களே முக்கியமானவை.

ஜே.வி.பி யினர் ஆயுத போராட்டம் வழியாக இடது சாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். அதேபோல ஈ.பி.டி.பி யினரும் இடது சாரி பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான்.

நாமும் இந்த முறை தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே கொழும்பு , புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான் ஆட்சியில் பங்கெடுப்பதா இல்லையா என்ற முடிவினை எடுக்கவுள்ளோம்.

நாமும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தான் உள்ளோம். எமது நிலைப்பாடு ” குட் கொலஸ்ரோல்’ ஏனைய கட்சியின் தமிழ் தேசியமானது “பாட் கொலஸ்ரோல்” ஆகும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

4 நாட்கள் முன்னர்
சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா நியமனம்

சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா நியமனம்

24 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா வேப்பங்குளத்தில் முற்றாக தீக்கிரையான வீடு

வவுனியா வேப்பங்குளத்தில் முற்றாக தீக்கிரையான வீடு

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

3 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In