ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இது தொடர்பான விசாரணை இடம்பெற்ற போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, 2019ஆம் ஆண்டு சாளம்பைக்குளம் பகுதியில் ஆபத்தான ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்ததாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் மூவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளார்