கந்தபளை – கொங்கொடியா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் , 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











