EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்.

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்.

கார்த்திகை 10, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தமது வாகனத்தில் குடும்பத்தினர் பயணித்துக்கொண்டிருந்த வேளை , அவர்களது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் முந்தி சென்றவர்கள் வாகனத்திற்கு முன்பாக தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் , வாகன சாரதியுடன் முரண்பட்டு , அவரை தாக்கியுள்ளனர். அதன்போது வாகனத்தில் இருந்த அவரது மனைவி இரண்டு மாதங்களேயான தனது குழந்தையுடன் இறங்கி கணவன் மீது தாக்குதல் நடாத்தியவர்களை தடுக்க முற்பட்ட வேளை அவரது கையில் இருந்த குழந்தையை பறித்து எறிந்து தாயையும் தாக்கியுள்ளனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியதும் , சீருடையில் வந்த பொலிஸார் வாகனத்தையும் வாகனத்தில் இருந்தவர்களையும் வாகனத்துடன் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று , தாக்குதலுக்கு இலக்கானவர்களை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில்,

நாங்கள் வாகனத்தில் பயணித்துக்கொண்டிந்த வேளை , மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எம்மை முந்தி சென்று விபத்துக்கு உள்ளானர்கள். அவர்கள் மதுபோதையில் இருந்தமையால் , நாங்களும் வாகனத்தை நிறுத்தி விட்டு , இருந்தோம். அப்போது சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் சாரதி அனுமதி பத்திரம் , வாகன ஆவணங்களை கேட்டிருந்தனர். சிவில் உடையில் உள்ள உங்களுக்கு அதனை காண்பிக்க தேவையில்லை. விபத்து நடந்துள்ள இடத்திற்கு போக்குவரத்து பிரிவு பொலிசாரை வரவழையுங்கள் என கூறினார்.

அதற்கு சிவில் உடையில் வந்திருந்தவர்கள் எனது கணவனை மூர்க்க தனமாக தாக்கினார்கள். அதனை தடுக்க சென்ற என்னையும் தாக்கி , எனது இரண்டு மாத குழந்தையையும் , என் கையில் இருந்து பிடுங்கி எறிந்தனர். பின்னர் சீருடையில் வந்த பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் எனது கணவரையும் கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.

அதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற சட்டத்தரணி மணிவண்ணன் , பார்த்தீபன் உள்ளிட்டோர் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக நின்றிருந்தனர். சட்டத்தரணி மணிவண்ணன் , பொலிஸ் நிலையத்தினுள் சென்று கைது செய்யப்பட்டிருந்தவரை பார்வையிட்டு , சம்பவம் தொடர்பில் நேரில் கேட்டறிந்து கொண்டார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

மதுபோதையில் பொலிஸார் அராஜகம் செய்வது பாரதூரமான அடிப்படை மனிதவுரிமை மீறல் இந்த குற்றச்செயலை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து செயற்பட சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை நேரில் பார்வையிட்டு , கேட்ட போது , தம்மை பொலிஸ் நிலையத்தினுள் வைத்தும் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார். அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக பொலிஸ் நிலையம் முன்பாக நின்ற மக்களை பொலிஸ் நிலையம் முன்பாக இருந்து களைந்து செல்லுமாறு பொலிஸார் பணித்து , மக்களை அங்கிருந்து விரட்ட முனைந்தனர்.

அதன் போது அங்கிருந்த யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் பொலிசாரிடம் நியாயம் கேட்க முற்பட்ட வேளை , அவரை போதையில் நின்று குழப்பம் விளைவிப்பதாக கூறி பொலிஸார் தாக்க முற்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி அராஜகமாக நடந்து கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைக்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய அலுவலகமானது நேற்றைய தினம் சனிக்கிழமை இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

2 நாட்கள் முன்னர்
மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

7 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

7 நாட்கள் முன்னர்
க்ளீன் ஐலண்ட்  திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

4 நாட்கள் முன்னர்
வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In