காலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை மடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றி சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.
விபத்தினையடுத்து பஸ்ஸில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வேறொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.