காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் 2 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மதரசா பாடசாலை மாணவர்களின் சடலங்களே மீட்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலும் குறித்த உழவு வண்டியில் 14 பேர் பயணித்ததாகவும், அனர்த்தத்தை அடுத்து உடனடியாக 5 பேர் மீட்கப்பட்டதுடன், காணாமல் போயுள்ள சாரதி, அவரது இரு நண்பர்கள் மற்றும் மேலும் 3 மாணவர்கள் தேடப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.