நீண்ட தந்தங்களை கொண்ட யானை ஒன்று கலாவாவி தேசிய பூங்காவின் மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
அநுராதபுரம் ஆடியாகல – கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த மின் வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளது.
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானையின் சடலத்தை பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











