யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் தேங்கி நின்ற வெள்ளத்தினை நகர சபையினருடன் இணைந்து அப்பகுதி இளைஞர்கள் வெளியேற்றி வருகின்றனர்.
கச்சாய் பகுதியில் 523ஆவது இராணுவ படைப்பிரிவின் முகாமிற்கு அண்மையாக உள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளம் தேங்கி நிற்கின்றது. அதனால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகர சபையிடம் அனுமதி பெற்று , நகர சபையுடன் இணைந்து அப்பகுதி இளைஞர்கள் வெள்ள வாய்க்கால்களை அமைத்து, அப்பகுதிகளில் காணப்படும் நீரினை இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.