பண்டிகைக்காலங்கள் வருகின்ற நிலையில் தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகரித்த விலை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நத்தார் பண்டிகை வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் அதிகரித்த விலையும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு தேங்காய் 180-200ரூபா வரை விற்பனையாகின்றது. இதே வேளை நாட்டு குத்தரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போது 280ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாளார்ந்த கூலி வேளைக்கு செல்கின்ற தொழிலாளர்கள் தற்போது மழை காரணமாக தொழில்களும் இல்லாத நிலையில் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.