EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தடைகளை உடைத்து சாதனைபடைத்த மன்னார் வீரமங்கை  யதுர்சிகா – ரவிகரன் எம்.பி வாழ்த்து.

தடைகளை உடைத்து சாதனைபடைத்த மன்னார் வீரமங்கை யதுர்சிகா – ரவிகரன் எம்.பி வாழ்த்து.

மார்கழி 9, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் – தோட்டவெளி அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவியான அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பல தடைகளைக் கடந்து ஈட்டி எறிதலில் தேசியரீதியில் தங்கத்தை சுவீகரித்து ஒட்டுமொத்த வன்னிமண்ணுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யதுர்சிகாவின் சாதனைப் பயணமானது தொடர்ந்து ஆசிய மற்றும், சர்வதேச ரீதியிலும் வியாபிக்கவேண்டுமென ரவிகரன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மட்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில், மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 37.37மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந் நிலையில் சாதனை மங்கை யதுர்சிகாவிற்கான தனது வாழ்த்துச் செய்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

சாதனைப் பெண் யதுர்சிகாவினால் ஒட்டுமொத்த வன்னிமண்ணும் பெருமையடைகின்றது. பலத்த தடைகளையும் சோதனைகளையும், வேதனைகளையும் கடந்தே யதுர்சிகா இந்த சாதனையைப் படைத்திருக்கின்றார்.

யதுர்சிகா கல்வி கற்கின்ற தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் விளையாட்டுமைதானம் இல்லை என்று சொல்லப்படுகின்றது. அதேவேளை பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் விபத்தொன்றில் சிக்கி அவர் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்.

இவ்வாறாக பல சோதனைகளையும், வேதனைகளையும், தடைகளையும் கடந்துதான் யதுர்சிகா இந்த சாதனையைப் படைத்திருக்கின்றார். அந்தவகையில் யதுர்சிகா சாதிக்கத் துடிக்கின்ற அனைத்து இளையோருக்குமான ஒரு முன்னுதாரணமாக அமைகின்றார்.

அவர் தேசியத்தைத் தொடர்ந்து இனி ஆசிய, சர்வதேசமட்டங்களிலும் சாதனை படைக்கவேண்டும். யதுர்சிகாவின் சாதனைப் பயணம் தொடரட்டும். அவரின் இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஆவணி 24, 2026
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

ஆவணி 24, 2026
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது
அண்மைய செய்திகள்

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

ஆவணி 24, 2026
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

ஆவணி 24, 2026
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

ஆவணி 24, 2026
யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்
அண்மைய செய்திகள்

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

2 நாட்கள் முன்னர்
வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

3 நாட்கள் முன்னர்
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

8 மணத்தியாலங்கள் முன்னர்
வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In