EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
எனது பெயரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்துள்ளனர் – முன்னாள் எம்.பி திலீபன்

எனது பெயரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்துள்ளனர் – முன்னாள் எம்.பி திலீபன்

மார்கழி 20, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எனது பெயரை பயன்படுத்தி எனது அலுவலகத்தில் இருந்தவர் செய்த மோசடிக்காக நான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20.12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பணமோசடி செய்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் பல சமூக ஊடகங்களிலும், செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த போது எனது அலுவலகத்திற்கு பலர் பல தேவைகள் கருதி வருவது வழமை. இதன்போது சில அரசாங்க அதிகாரிகளுக்கு அதனை சிபார்சு செய்து அனுப்புவது வழமை. ஆனால் முகவர்களாக சிலர் செயற்பட்டு எனது பெயரைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே நடந்தது. எனது அவலுகத்தில் இச் சம்பவம் அலுவலகத்தில் இடம்பெற்றதால் நான் அதற்கு பொறுப்பு சொல்ல வேணடியிருந்தது. இதனால் நீதிமன்றம் சென்று எனது தரப்பு நியாயங்களை நான் முன்வைத்துள்ளேன்.

அந்த பணம் எனது வங்கி இலக்கத்திற்கு வரவுமில்லை. நானும் கை நீட்டி வாங்கவும் இல்லை. அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் இதனை வைத்து பல கட்டுக் கதைகளை கட்டுகிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் காணி மாபியா வேலை செய்யவில்லை. மாறாக அரச காணிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன்.

அதுவும் அடிமட்ட மக்களுக்கே அதனை வழங்கியுள்ளேன். காணி மாபியாக்களுக்கு எதிராக நானும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். அரச காணிகளை பிடித்து கள்ளமாக உறுதிகளை எழுதி வைத்துள்ளார்கள். அதனை மீட்டு நான் மக்களுக்கு வழங்கினேன். அப்படியான பலர் குழுவாக எனக்கு எதிராக சதி செய்து வருகிறார்கள். நான் சொத்து சேர்ந்துள்ளதாகவும் பல கதைகளை சொல்கிறார்கள். அவை அனைத்தும் பொய்.

முகநூலில் வீரம் பேசுபர்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை சட்டத்தை மையமாக கொண்டு வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் என இணைந்து நாம் வன்னியில் புதிய சக்தியாக எழுச்சி பெறவுள்ள நிலையில், அதனை முடக்குவதற்காக இந்த வேலைகள் இடம்பெறுகிறது.

எனது அலுவலகத்தில் இருந்த ஒருவர் செய்த மோசடிக்காக, அந்த அலுவலகத்திற்கு பொறுப்பானவர் நான் என்ற அடிப்படையில் தான் நீதிமன்றம் போக வேண்டியுள்ளது. நான் அவ்வாறு செய்திருந்தால் அல்லது சொத்து குவித்திருந்தால் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன். எனக்கு விழுந்தது 3000 வாக்கு. ஆனால் எனது பெயரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்துள்ளனர். தற்போது ஒரு வழக்கு வந்துள்ளது. இனி எத்தனை வருகிறதோ தெரியாது. அதனை நீதிமன்றம் ஊடாக அணுக தயாராகவே உள்ளேன் எனத் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

ஆவணி 11, 2026
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஆவணி 11, 2026
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

ஆவணி 11, 2026
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
அண்மைய செய்திகள்

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஆவணி 11, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?
அண்மைய செய்திகள்

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பொலன்னறுவையில்  தனியார் அதிசொகுசு பேருந்துடன்  மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து

பொலன்னறுவையில் தனியார் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

8 மணத்தியாலங்கள் முன்னர்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

1 நாள் முன்னர்
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

2 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In