இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பெப்ரவரி 21 ஆம் திகதி திரைக்கு வந்த திரைப்படம் ‘டிராகன்’. School, Collage, வேலை, காதல் வாழ்க்கை என்று எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வோடு பேசிய திரைப்படம் டிராகன்
இந்தத் திரைப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
இவர்களுடன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் சினேகா, இவனா, அஸ்வத் மாரிமுத்து, தீபா சங்கர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் ‘PR04 ‘ திரைப்படத்தின் பூஜை இன்று இடம்பெற்றது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாரூன் என பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்