மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











