EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம்

வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம்

ஆவணி 3, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது குழாய்கிணறு அடிக்கும் இயந்திரங்களின் உரிமையாளர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகன்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.

இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அதடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபாரிசிற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும் அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிசார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

3 நாட்கள் முன்னர்
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்
மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In