EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

ஆனி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார், சவுத் பார் (South Bar) பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயமானது எவ்வித முழுமையான கட்டுமானங்களும் இன்றி, முற்றிலும் சேதமடைந்த நிலையில் பல வருடங்களாக காணப்படுகின்றது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியில் குறித்த சட்டவிரோத அகழ்வு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் குறித்த சம்பவ இடத்தில், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சில தடயங்களும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அகழ்வு இடம்பெற்ற பகுதியில் திருஷ்டி நூல்கள், கற்கள் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் காணப்படுவதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியானது அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புனித ஜோசப் வாஸ் (Joseph Vaz) முனிவர் இலங்கைக்கு முதல் முறையாக வருகை தந்த பகுதிக்கு மிக அருகிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பகுதியில் உள்ள குறித்த ஆலயம் நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பழமையான ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சட்டவிரோத புதையல் அகழ்வு முயற்சி தொடர்பில் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பொலிஸார் இதுவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் மக்கள் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப் படுவதையும், சட்டவிரோத புதையல் அகழ்வுகளையும் தடுக்க உரிய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு தகுந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

2 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

2 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

2 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In