அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமான பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய் மாற்றியமைக்கும் வேலை காரணமாகவும் நீர்வெட்டு ஏட்படும் என கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (11) மாலை 7 மணி முதல் வெள்ளிக்கிழமை (12) காலை 7 மணி வரை நீர் வெட்டு ஏட்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மகர பிரதேச சபைக்குட்பட்ட அல்தெனிய, கோனஹேன, வேபட, சூரியபாலுவ, உடுபிட ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளுக்கும், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட பரகந்தெனிய, கொஸ்ஸின்ன, எபரளுவ, இம்புல்கொட, யாகொட ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.











